STORYMIRROR

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

கொலுசுச் சத்தம்

கொலுசுச் சத்தம்

1 min
331


அந்த சன்னலில்

அவன் தெரிந்தான்!

அழகிய வதனம்!

கல்லூரி இறுதி ஆண்டு

போலும்!

எப்பொழுதும்

படித்துக் கொண்டிருந்தான்!

என் வீட்டுச் சன்னலின்

திரை விலகலில்

நான் அவன் முகம்

பார்க்கும் போது

அவனும் பார்ப்பான்!

என் கொலுசுச் சத்தம்

அவன் பார்வையை

என் நோக்கித் திருப்ப உதவும்.

அவனும் நானும்

சில சமயங்களில்

ஒரு புன்னகையைப்

பரிமாறிக் கொள்வோம்.

எங்கள் காதல்

இந்தப் பார்வைப்

பரிமாற்றத்திலேயே வளர்ந்தது.

சில நாட்களாக

கொலுசைக்

கழற்றி விட்டேன்.

அவன் கவனம் சிதறாமல்

தேர்வுக்குப் படிக்கட்டும்.

இதை அவன் புரிந்து கொள்வான்.

உண்மையான அன்பு

புரிய வைக்கும்!



Rate this content
Log in

Similar tamil poem from Romance