கனவுகள் விலகிட
கனவுகள் விலகிட

1 min

23.5K
இருள் பிரியாத காலைப் பொழுதினில்
இரும்புத் திரையாய் படர்ந்திருக்கும்
மரங்களின் குளுமை நிழல்தனில்
மனம் லயித்து நின்ற போதினில்
வாழ்வின் புதிருக்கு ஒரு விடை காண
வார்த்தைகளில் வந்தாள் கவிதை மகள்
ஒளிக்கீற்றாய் அறிவொளி ஒளி வீச
கண்களின் கனவுகளில் ஓர் தடுமாற்றம்
காதல் வயப்பட்ட இளைய மனதாக
இனிமையாய் வீசிடும் காலைத் தென்றலில்
விடை ஒன்று எனக்குள் தெரிந்திட
விட்டு விலகிய சுமையாக
கனவுகள் விலகிட
நான் கண்டு கொண்டேன்
என் வாழ்வின் இரகசியத்தை!