நானும் நீயும்
நானும் நீயும்


மெத்தை போன்ற மணலில்
கால் பதித்து நடக்கையில்
சத்தமாக ஆர்ப்பரிக்கும்
கடல் அலைகளில் நித்தமும்
ஒலிக்கும் சங்கீதமாய் நீ!
ஆழ் கடலில் ஆதவனின்
ஒளிச்சிதறல்களில்
பவளப் பாறைகளின்
அழகினில் நீ! உப்புக்காற்றில்
நினைவுகள் சரசரக்க
உயரத்தில் சுழன்றாடும்
பட்டத்தின் சிறகுகளாய்
உன் இனிய நட்பு புன்னகை
என்னை சிறை கொள்ள
என்னுள் பொங்கியெழும்
உணர்வுகளின் விளிம்புகள்
சுழன்று எழும் புயலின் வேகமாய்
கவிதைகளில் உருக்கொள்ள
உன் கரங்கள் எனும் சிறைதனில்
தன்னிலை மறந்து
துயில் கொண்டனவே!