இறை
இறை
இறை எனும் மந்திரக் கோல்...!
நில்லாதியங்கும் இதயமும்
நிறையவேஎண்ணும் மூளையும்
எல்லாமும் உண்டாலும்
எளிதில் செரிக்கும் செயலும்
அழகைக் காணக் கண்களும்
அழகாய்க் காண அறிவும்
விழிகளில் உணரும் அன்பும்
இதயத்தில் ஊறும் காதலும்
விதியினை வெல்ல மதியும்
அதிசயம் உணரும் ஆற்றலும்
முறையாய் நடப்பது எதனால்?
இறையெனும் மந்திரக்கோலால்!