சொல்ல மறந்த கதை...!
சொல்ல மறந்த கதை...!
சொல்ல மறந்த கதைகளை விட
சொல்லாமல் மறைத்த கதைகள்
மூளையின் நரம்புகளில் தங்கி
மனதை முடக்கிப்போடும விடம்!
மறைக்கப்பட்ட கதைகள்
மறைக்கப்பட்ட இடம் பொருத்து
மனதைக் கொல்லும்!
மறைக்க வேண்டிய கதைகளை
மறைக்காமல் சொன்னால்
வாழ்வு வழியிழக்கும்!
சொல்ல முடியாத கதைகள்
நடக்க முடியாதபடி
நாம் நடந்தால்
சொல்ல முடியாத கதைகள்
நடக்க வாய்ப்பில்லாதலால்
சொல்ல வேண்டிய
அவசியம் ஏற்படாது!
மறைக்கப்பட்ட கதைகளின் போது
மனதை உற்று நோக்கி
மன்னித்து
தியானம் வழியே
வெளியே வரலாம்