நாணம்
நாணம்
நாணமெனும் உணர்வுடனே
நங்கையவள் நடைபயில
காணாத கண்களுண்டோ?
கவிவரையாப்புலவருண்டோ?
வெண்ணிலவு நாணத்தினால்
விந்தையாய்ச் சிவப்பாக
கண்ணிமைகள்செயல்மறந்து
கவினுருவில் மயங்கியதே!
நாணமெனும் உணர்வுடனே
நங்கையவள் நடைபயில
காணாத கண்களுண்டோ?
கவிவரையாப்புலவருண்டோ?
வெண்ணிலவு நாணத்தினால்
விந்தையாய்ச் சிவப்பாக
கண்ணிமைகள்செயல்மறந்து
கவினுருவில் மயங்கியதே!