கொலுசு சங்கீதம்
கொலுசு சங்கீதம்
உன் கொலுசின் ஒலி
இசை கோர்க்க
என் இதயத்தில்
நாட்டிய அரங்கேற்றம்!
உன் மெல்லிய
பாதங்கள்
தரையை முத்தமிடும் போது
உன் கொலுசுகளால்
உருவாகும்
சங்கீதத்தில்
தியானிக்கிறேன்!
சிவந்த நிறப்
பாதங்களில் தவழும்
வெள்ளிக் கொலுசுகளின்
சத்தங்கள்
என் இதயத்திற்கு இன்பம் தரும்
முத்தங்கள்!
உன் அழகுப்
பாதங்களில்
ஆசையுடன்
நடனமாடிக்
கொண்டிருக்கின்றன
உன் கொலுசுகள்!
கவிதை சொல்லிக்கொண்டே
நடனமாடும் அதிசயம்
உன் பாதக் கமலங்கள்!