STORYMIRROR

Rajini Benjamin

Romance

4  

Rajini Benjamin

Romance

கனவொன்றில்

கனவொன்றில்

1 min
353

கார் கால மேகமும்

கரிசனம் செய்யவே ...

கலக்கமுற்ற கன்னியவள் ;

உற்ற துணை நீ தானென்று

உடன் அழைக்க உரிமையுள்ள

மாமன் மகள் ; அவள் தந்தாள்

மனதில் ஒரு கோடி மின்னல் கீற்று..

மயக்கும் பாவை அவள்

மடிசேர நினைக்கிறேன்..

மழைத்துளி தந்த வரம்

கைக்கோர்த்து நடக்கின்றேன் ..

பாதைகளும் நீளாதோ...

பார்வையாலே பரிதவித்தேன்..

நம்பியவளின் கரம் பிடித்து

நாட்களும் தினம் கடக்காதோ ...

அந்த நாள் வரும் காலம்

அந்தி பகல் என் வசமே ...

என்னில் அவளாக !...

அவளில் நானாக !...

நாம் கொண்ட உலகமும்..

நமக்கான இன்பலோகம்...

கண்ணசைவில் காலமும் கழித்திடவே !

இசைந்து நானும்

உன்னோடு என்னாளும் ...

பூங்கோதையன் புன்சிரிப்பு

பூக்கள் தரும் பூங்காவனம் போல்.....

கண்மூடி நான் கண்ட கனவொன்றில்,

இத்தனையும் காட்சிகளாக உருவம் கொண்டு இனித்கிறதே



Rate this content
Log in

Similar tamil poem from Romance