உறவுகளின் பயணம்.
உறவுகளின் பயணம்.
1 min
318
தொடரும் பயணமான வாழ்க்கையில்;
விதவிதமான வண்ணப் பறவையென தென்படும் உறவுகளின் அனுபவமாக
சிந்திய சில துளிகள் உள்ளமெனும் பூங்காவில்;
உவர்பளிக்கும் கடல் காற்றில் நின்றிருக்க,
பாதங்கள் தொட்டு விளையாடும் அலையென சில உறவுகள்;
மாலைத் தென்றலாய் உள்ளம் தொடும் சில உறவுகள்;
சுடும் மணலில் விழுந்த நீர் துளிப் போல் நிலையில்லா சில உறவுகள்;
செம்புலம் கலந்த நீரென நிலை பெறுவதற்காக சில உறவுகள்;
உணர்வுகளின் பெட்டகமாய் வாழ்க்கைப் பயணம்...இதுவென!!!