STORYMIRROR

Rajini Benjamin

Others

4  

Rajini Benjamin

Others

அழகு என்பேனா?பேரழகென்பேனா.

அழகு என்பேனா?பேரழகென்பேனா.

1 min
289

அலர் சுரும்பென்றே

மேனியுடையாள்-

அவள் துஞ்சும் 

பேரழகும் யெனை வீழ்த்த!... 


மதி நிறை 

குளுமையினை

யான் உணர்ந்தேன்!.. 

உள்ளத்துள் உவகையுடனே,


பூம்பொழில் பொய்கையின்

குவளை யென மலர்ந்ததே

இதைய கமலமதுவும்!..நாழிகையும்

தாழ்த்தாமல்,


பேசாத அலரதுவை

தென்றல் தீண்டியே

கன்றி சிவந்ததோ

கன்னமதுவும்!!!! என்றே

இமைக்கமறந்து பார்த்தபடி 

எனது விழிகள்,


எனை கேளாது எனதுள்ளமும்

சேதி பகர்ந்தன இங்ஙனம்...


கண்கள் இரண்டே

தந்ததுவும் குறையாகி

போனதே

இப் பேரழகினை

பருக்க போதவில்லையென,


ஞிமிறாகி வட்டமிட்ட

மனமதுவும், விசும்பினை தொட துடிக்கும் பட்சியாக 

பேராவலுடன் யெனை மாற்ற,


கட்டுண்டு காண்கிறேன்

மதிமுக எழிலுடை ஏந்திழையாளை

தொட்டுவிடும் தொலைவில்

அமர்ந்தபடி நானும்.


குறிப்பு :-


அலர் - மலர்ந்த மலர்

சுரும்பு- மாலை

துஞ்சும்- உறக்கம்

ஞிமிறு- தேனீ/ வண்டு

விசும்பு- வானம்.









Rate this content
Log in