தந்தையின் தாலாட்டு
தந்தையின் தாலாட்டு
ஆராரோ! ஆரிராரோ!
தந்தையின் தாலாட்டு
தாயின் தாலாட்டு
தங்கமே நீ உறங்க_இந்த
தந்தையின் தாலாட்டு
தாட்டியமாய் நீ வளர( ஆராரோ)
கண்ணும் இப்போ நீ உறங்கு
கணக்கா பாட்டு கேட்டு!
பள்ளிக்கூடம் போகவேணும்
பட்டம் பல வாங்க வேணும்
பாட்டியும் சொல்லி வச்சா_நானும் அத கேக்கலயே
கேக்காம இருந்ததால் _பல
கேள்விக்கும் பதிலில்ல(ஆராரோ)
நான் படிக்காத படிப்பெல்லாம்_நீ
படிக்க வேணாம்பா
உனக்கென்ன வேணுமா _அத
நீயும் படிச்சுக்கோ!
படிக்கும் ஆசான்ட
பண்போட நடந்துக்கோ(ஆராரோ)
பொண்ணு என்றும் சாமிதான்_நீயும்
அத உணர்ந்துக்கோ!
படிப்போட பண்பையும்
எப்பவுமே வளர்த்துக்கோ!
நல்லதும் கெட்டதும்
பிரெஞ்சு பார்த்து தெரிஞ்சுக்கோ!
நாளும் உன் அறிவதான்
புத்தகம் படிச்சு செதிக்கிக்கோ(ஆராரோ)
பகல்னு இருந்தா
இரவும் இருக்கும் தெரிஞ்சுக்கோ!
இன்பத்தோட துன்பத்தையும்
சேர்த்து நீயும் பழகிக்கோ
பகட்டா வாழ வேணாம் _பிறர்
பயன் தர வாழ்ந்துக்கோ_(ஆராரோ)
சொகுசா வாழவேணாம்
சொர்க்கம் எதிலுனு தெரிஞ்சுக்கோ!
இயற்கையோடு இயற்கையாய்
வாழ நீயும் கத்துக்கோ!
இயற்கையையும் பெண்ணையும்
பாதுகாக்க தெரிஞ்சுக்கோ(ஆராரோ)