STORYMIRROR

Se Bharath Raj

Drama Tragedy Classics

4  

Se Bharath Raj

Drama Tragedy Classics

காதலியின் கைக்குட்டை

காதலியின் கைக்குட்டை

1 min
356

ஆரஞ்சு நிறத்திலோ

இளஞ்சிவப்பு நிறத்திலோ

அது இருக்கும்.,

உள்ளங்கையைக் கொண்டு

யார் கண்ணிற்கும் தெரியாது

அதை மறைத்தே விடலாம்.,

ஆனால் அதை

அவள் மறைத்தாக 

எனக்கு நினைவில்லை.,

அது அவளது

முகம் போன்று 

சிறியதாய் 

அழகாய் இருக்கும்.,

அதன் எல்லையில்

வெள்ளை நூலில்

கோடு போட்டிருக்கும்,

அதன் உள் பகுதியில்

மஞ்சல் நிறத்தில்

பூ போட்டிருக்கும்.,

அதை கொண்டு

நானும் முகம்

துடைத்தைதது உண்டு.,

அதில் 

அவளது மணம் இருக்கும்,

திருநீறு மற்றும் குங்குமம்

இணைந்து தரும் மணம்.,

அதன் ஆழத்தை

பார்க்கும் போது,

அவளது கைக்குட்டையில்

என் காதலியின்

கைக்குட்டையில்

அவள் மறைத்து வைத்திருந்த 

கண்ணீரும் புன்னகையும்,

என்னையும்

கண்ணீர் விட வைக்கும்

என்னையும்

புன்னகை செய்ய வைக்கும்…


साहित्याला गुण द्या
लॉग इन

Similar tamil poem from Drama