நாவிற்கு அடிமையாகாதே!
நாவிற்கு அடிமையாகாதே!
சமையல் ஒரு கலை....
சமைத்து......
வாழையிலையில்
அறுசுவை விருந்து படைப்பது.....
தமிழனின் தனி அடையாளம்!
மரபுசார் உணவை விருந்தாக்கினோம்!
உடலுக்கும் விருந்தானது...
கூடவே நல்மருந்தும் ஆனது!
உழைப்பு உடலை வலுவாக்கியது!
அது ஆயுளை கூடுதலாக்கியது!
மரபுசாரா உணவை விருந்தாக்கினோம்....
கண்ணுக்கும் நோய்க்கும் நல் விருந்தானது!
உற்பத்தி வேகமானது.....
உணவு சமைப்பது வேகமானது!
அதிவிரைவு வேகத்தில் பயணம்....
வந்து சேர வேண்டிய இடமும் மின்னல் வேகத்தில்....
மூன்று வேளை உணவு....
மூன்று வேளை டீ....காபி!
இடையிடையே நொறுக்குத்தீனி....
எல்லாம் சம்பிரதாயம்!
வயிறு கேட்டு உண்ட காலம் மாறி....
வாய் கேட்டு.... வாய் கேட்கும் உணவு...
கடிகாரம் பார்த்து உண்ணும் படிய
ானது!
விதவிதமான உணவு....
விதவிதமான வியாதி.....
விதவிதமான மாத்திரை!
இன்று மாத்திரையின்றி....
வாழ்க்கை யாத்திரை இல்லை! ஏன்...?
நித்திரையும் இல்லை!
கூடவே உழைக்க மறந்ததனால்....
வியாதியும் அழையா விருந்தாளியானது!
நாவிற்கு அடிமையானால்...
நோவிற்கு அடிமையாவாய்!
சாவிற்கும் அழைப்பு விடுப்பாய்!
உணவை மருந்தாக்கினால்...
மருந்தை உணவாக்க வேண்டாம்!
இங்கு பசிக்காக சாப்பிடுவதை விட...
ருசிக்காக சாப்பிடுவதே அதிகம்!
பசியறிந்து.. ருசியறிந்து....
உணவை மருந்தாக்கி.. ..
அளவோடு உண்டு..
உழைப்பை உறவாக்கிடுவோம்!
.உடல் கூறிடும் மொழி கேளுங்கள்!
நோயின்றி வாழுங்கள்!
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!
போட்டி எண் 5