STORYMIRROR

Siva Kamal

Tragedy Action Classics

4  

Siva Kamal

Tragedy Action Classics

கற்றது

கற்றது

1 min
23.5K

இந்த விடுமுறை நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது.

தாயக்கட்டையையும் பம்பரத்தையும் தூசிதட்டச் செய்திருக்கிறது.

காற்றாடிகளுக்கு இறக்கைகளை கத்தரிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

அலைபேசிகளையும் தொலைக்காட்சிகளையும் துறந்து மொட்டைமாடிகளில் நட்சத்திரங்களை எண்ண வைத்திருக்கிறது.

நீ வீட்டைப் பெருக்கு, நான் பாத்திரம் கழுவுகிறேன், உனக்கு வெங்காயம், எனக்குப் பூண்டு என்கிறபடி வேலைப்பளுவைப் பகிர வைத்திருக்கிறது.

அந்திசாயும் நேரங்களில் வாசலில் நாற்காலி போட்டு அமரச் செய்திருக்கிறது

வீட்டினுள் அடைபட்டுக்கிடப்பதன் மன அழுத்தத்தை உணர்த்தியிருக்கிறது.

அடைபட்டுக்கிடப்பவர்களின் வலியையும்...


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy