நரகமாக கழிந்தது
நரகமாக கழிந்தது
மானம் தன்மானம்
இதனால் இழந்தது
காதல் தான்..
ஒரு பையனின்
மனநிலை..
நான் காதலித்தேன்
ஒரு பெண்ணை
அவளும் காதலித்தாள்
இருவரும் காதலிப்பது
தெரிந்தால்
பெற்றோரின் மானம்
போய்விடும்..
என்பதால்
வேண்டாம்
என்றேன்..
ஆனால்
அவளின் நினைவு
மறக்க முடியாதது
எந்த பெண்ணை
பார்த்தாலும்
அவளின் பெயரை
கேட்டாலும்
சட்டென்று
திரும்புகிறேன்..
அவளின் கண்களை
போல் யாரு
கண்ணுமே இல்லை..
என்ன வசியம்
செய்தாலோ
மை போடாத
கண்களால்..
சில ஆண்டுகளும்
செல்ல செல்ல
திருமணமும்
செய்துக்கொண்டேன்
வேறு பெண்ணே
அந்த வாழ்க்கையின்
ஒவ்வொரு நாளும்
நரகமாக கழிந்தது..
காதலுக்கு மானம்
இல்லாமல்
இருந்திருக்கலாம்னு
தோனுதே..
