STORYMIRROR

Tamizh muhil Prakasam

Action Children

4.5  

Tamizh muhil Prakasam

Action Children

உடன்பிறப்புகளே ஆசானாய்...நட்பாய்...

உடன்பிறப்புகளே ஆசானாய்...நட்பாய்...

1 min
1.3K


உடனிருக்கும் அண்ணனும் அக்காவும்

செய்திடும் செயலனைத்தும்

செய்து பார்த்திடவே

பரபரத்து துடிதுடிக்கும்

சகோதர நெஞ்சம் !


அதட்டலும் விரட்டலும்

அங்கே ஓர்நாளும் எடுபடாது 

சோர்ந்தாலும் ஓய்ந்தாலும்

எந்நாளும் விளையாட்டுத் துணை

அண்ணனும் அக்காவுமே !


விட்டுக் கொடுத்தலும்

சண்டை பிடித்தலும் என

நிமிடத்திற்கோர் முறை

காட்சிகள் மாறும்

அனைத்து இல்லங்களிலுமே !


காலம் பல கடந்தாலும்

நினைவில் நிழலாடும்

உடன் பிறப்புகளோடே

மகிழ்வாய் கழித்து

களிப்புற்ற குழந்தைப் பருவமே !


Rate this content
Log in

Similar tamil poem from Action