STORYMIRROR

S. SivaneshwaranMA

Action Others

5  

S. SivaneshwaranMA

Action Others

நிர்வாணம்!

நிர்வாணம்!

1 min
471


இது பாஞ்சாலிக்காய் 

கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டே இருந்தது!

அங்கு கோவலனை

மயக்கும் ஒரு மாதவியின்

மார்பில் தூரி ஆடியது!


நாட்டின் சுதந்திரத்திற்கு

ஒவ்வொரு வீரத்தியின்

உடம்பிலிருந்து அவிழ்க்கப்பட்டது!

ஒவ்வொரு தாய்மார்கள்

கட்டும் தொட்டிலுக்கும்!

ஆம்பளைகளின் கோவணத்திற்கும்

தன்னை ஆட்படுத்திக் கொண்டு

தியாகம் செய்யவே

செடியில் இருந்து 

அம்மணமாகியது பருத்தி!



Rate this content
Log in

Similar tamil poem from Action