தமிழ் மொழி!!
தமிழ் மொழி!!
தமிழ் மொழி!!
தமிழே நமது தாய்மொழி என்பது
யாரும் இங்கு அறிவதில்லை,
தமிழே பிறந்த தமிழர் நாட்டில்
தமிழ் தான் எங்கும் காணவில்லை,
ஒட்டியிருக்கும் அண்டை நாட்டின்
வளர்ச்சி என்பது தாய்மொழியே,
கட்டியணைக்குது ஆங்கிலம் எங்கும்
தமிழர் அவரவர் நாவினிலே,
ஆயிரம் ஆண்டின் முந்தைய பகுதியில் முன்பே தோன்றிய மூத்தமொழி,
தமிழை மறந்தவன் தாயை மறந்தவன்
என்று சொன்னதும் தமிழ்மொழி,
கற்றவர் அனைவரும் போற்றி துதித்த நெஞ்சில் நீங்கா கடவுள்மொழி,
கடவுளை மறந்து ஆங்கிலம் எதற்கு
நாவை விட்டு மிதி மிதி!!
எத்தனை உயிர்கள் வாழ்ந்து மடிந்தாலும் தமிழ் மொழி என்றும் மடியாது,
கடமைக்காக தமிழைப் படித்தால் தமிழ்மொழி வாயில் நுழையாது!!
