கோடைக்காலம்
கோடைக்காலம்
புது கோடைக்கால நேரமிது
என் பருவம் வந்து வருடியது!!
ஒரு வேணிர்க்கால நிகழ்வு இது
என்னை குதித்து ஓட சொல்லியது!!
கோடை காலம் வந்துவிட்டால்
குளத்தைத் தேடி ஓடிப்போவோம்!!
ஆலமர விழுதினிலே
ஆட்டாந்தூரி ஆடிப்போவோம்!!
சக்கரம் ஓட்டி அடிபட்ட புண்ணும்
அழகான கதை சொல்லும்!
ஆணிபட்ட மரமோன்று
குறுஞ்செய்தி திரட்டி தரும்!!
சட்டி கருக்கி ஆக்கிய சோரோ
அனைவருக்கும் பசியாத்தும்!!
அடிப்பிடித்த கறிசோரோ
அதிக அளவு ருசியேத்தும்!!
பண்டிகை காலங்களில்
பளிச்சென்று இருப்போம்
பிள்ளையார்கோவில் சாமிக்கு
பஞ்சாமிருதம் சமைப்போம்!!
ஒருவருக்கு ஒருவர் சொந்தம் போல
ஒற்றுமையாய் இருப்போம்
நாங்கள் செய்த தவறை மட்டும்
யாருக்கும் தெரியாம மறைப்போம்!!
கோடை விடுமுறை என்றாலே
கோடி மகிழிச்சி அடைவோம்!!
அந்த முப்பது நாள் மகிழ்வை மட்டும்
முப்பது வருடம் ரசிப்போம்!!
