STORYMIRROR

S. SivaneshwaranMA

Others

4  

S. SivaneshwaranMA

Others

இதனையும் வரவேற்கலாம்!

இதனையும் வரவேற்கலாம்!

1 min
353

 எத்தனையோ மனிதர் மத்தியில்

 பல சித்தர்கள் பிறந்தனர்!!

 எத்தனையோ இளைஞர் மத்தியில்

 பல அறிஞர்கள் தோன்றினர்!

 எத்தனையோ பெண்கள் மத்தியில்

 பல வீராங்கனைகள் வளர்ந்தனர்!!

 பிறப்பால் அனைவரும் ஒன்று

 அவர்கள் சாதிக்கும் திசை வேறு!!


 உலகை வெல்வதற்கு

 உடலும் உருவமும் தேவையில்லை,

 பலமான மனமும்

 வளமான குணமும் இருந்தால் போதும்!

 எல்லாவற்றையும் கெடுக்கத் துடிக்கும்

 பல வெறியவர்களால்

 இவர்களின் குறி, குறி வைக்கப்படுகிறது!


 "சக மனிதனுக்கு உணவில்லையெனில்

 ஜகத்தினை அழித்திடுவோம்"

என்றான் பாரதி!! - ஆனால்,

 தனிமனிதன் துன்புறுத்தப்பட்டால் 

 தண்டனை என்ன உண்டு என்பதுதான்

 இப்போதைய கேள்வி!!


பிடித்தவர்களை மனதால் ஏற்றுக் கொள்ளலாம்,

வெறுப்பவர்களை அறவே தள்ளிவிடலாம்,

விருப்பு, வெறுப்பு ஒரு மனிதனின் உரிமை

அவர்களையும் ஏற்றுக்கொள்வாய் - சமூக

வெட்கட்கேடே!!!


 



Rate this content
Log in