STORYMIRROR

Ananth Sivasubramanian

Abstract Action Inspirational

5  

Ananth Sivasubramanian

Abstract Action Inspirational

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

1 min
503

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்,

அதனை கொள்வோம் மனதினிலே,

பாரத நாடே என்,

தாய்த்திருநாடே,

பலர் கூடி பாடுபட்டே,

தியாகங்கள் பல செயது,

அகிம்சை கடைப்பிடித்து,

முத்தமிழ் வழியே,

நாம் பெற்ற சுதந்திரத்தை,

தாயின் மணிக்கொடி ஏற்றி,

நலமே கொண்டாடி,


உழைப்பால் உண்மையால் உயர்வோம்....

சாதி மத பேதமின்றி ஒற்றுமையாய் இருப்போம்...

பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம்....

பாருக்குள்ளே நல்ல நாடாய் திகழ்வோம்,

என உறுதி கொள்வோம் இந்நாளில்,


பல மொழிகள் பேசினாலும்,

 நாடு ஒன்று தான்,

பல மாநிலங்களாக பிரிந்திருந்தாலும் ,

நாடு ஒன்று தான்,

பலவகை மக்கள் வாழ்ந்தாலும் ,

தேசம் ஒன்று தான்,

காப்போம் வளர்ப்போம் சுவாசிப்போம்...

வாழ்க தமிழ்,

வாழ்க பாரதம்,

வாழ்க வையகம்,

வந்தே மாதரம்...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract