என் அருமையான அன்னையார்
என் அருமையான அன்னையார்
ஈர் இரு திங்கள் வயிற்றில் சுமந்து என்னை இவ்வுலகிற்கு கொண்டு வந்தவரே,
நான் நடப்பதற்கும் பேசுவதற்கும் உதவி செய்தவரே,
நான் மழலையில் பேசிய முதல் சொல்லே அம்மா தானே,
எனக்கு படிப்பதற்கும் வெளியே செல்வதற்கும் உதவுபவரே,
என் பசி அறிந்து சுவையான உணவு கொடுப்பவரே,
என் பலம் எது என்று எனக்கு உணர்த்துபவரே,
மன வேதனை தீர்ப்பவரே,
நல்லதை செய்பவரே,
சகிப்பு தன்மை கொண்டவரே,
அன்பு அரவணைப்பு பாசம் நேசம் கொண்டவரே,
நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்,
இவரே என் அருமையான அன்னையாரே
இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்
