STORYMIRROR

Maha Lakshmi

Action Classics Others

4  

Maha Lakshmi

Action Classics Others

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

1 min
264

அவள் பயந்துக்கொண்டிருந்தாள்...

தனக்கு தானே பல கட்டுப்பாடுகளையும்

சில வேலிகளையும் போட்டுக்கொண்டாள்..

தனக்கு பிடித்ததை மனதுக்குள்

ஒழித்து வைக்க பழகி கொண்டாள்..

போலியாக புன்சிரிப்பு செய்து

மறைத்துக்கொள்வாள்...

கண்கள் பார்க்கும் அனைத்து மேலேயும் ஆசைப்படும்...

பார்க்க கொடுத்து வைத்த எனக்கு

அதே வாங்க தகுதியில்லையே..

என வருந்தி கடந்து செல்வாள்..

வானம் அளவிற்கு அவள் ஆசை இருந்திருக்கும் போல..

இறைவன் நிறைவேற்ற மறுக்கிறான்..

எந்த ஆண்மகனையும் பார்க்காமலே

கடந்து செல்ல வேண்டும்....

கண்களில் மட்டுமே என் பார்வை

இருக்க வேண்டும்...என்ற கட்டுப்பாட்டுடன்

நடந்து செல்வாளாம்..

அவள் நினைத்தது போல்

யாரிடமும் பேச்சி கொடுக்காமல்

விலகி விலகி நடப்பாளாம்..

அவளுக்கு இந்த உலகம் கொடுக்கும்

பட்டம் என்னவாக இருக்குமாம்..

தெரியுமா??...

"யாரையாவது காதலிக்கிறயா?"

என்ற கேள்வி தான்...

அவளோ இல்லை இல்லை என்ற

பதிலை விடையாக வைத்திருப்பாளாம்..

யாரும் அவள் கூறுவதை நம்புவது

இல்லையாம்...கண் கலங்கி

என் முன்பு நின்று

கவி வடிக்க வேண்டி சென்றாள் அவள்..


Rate this content
Log in

Similar tamil poem from Action