நவீன கால பாரதி
நவீன கால பாரதி


அச்சம் தவிர் என்றேன்
இந்தியனே! அநியாயம் கண்டு வீழாதே, காப்பது காவலுக்கு மட்டும் இல்லை!!!
மானம் போற்று என்றேன்
மங்கையே! உரியவனுக்கு என்று உணறு, பலர் கண்களுக்கு இல்லை!!!
சூரரை போற்று என்றேன்
வீரனே! திறன் உடையவனை உருவாக்கு, அவனை இழிவு படுத்தி மனம் புண் படுத்த இல்லை!!!
பொய்மை இகழ் என்றேன்
தியாகியே! அரசியல்வாதி ஆன பின் பொய்கள் வேண்டாம், வாக்கு சேகரிக்க மட்டும் இல்லை!!!
கற்றது பழகு என்றேன்
மாணவரே! ஒழுக்கமும் சேர்த்துதான், கற்பித்தல் மட்டும் இல்லை!!!
ஞாயிறு போற்று என்றேன்
வாழ்வில் வெளிச்சம் தந்த சூரியனை, இருட்டு அறையில் ரசிகனாக கதாநாயகனுக்கு இல்லை!!!
சாவதற்கு அஞ்சேல் என்றேன்
இளைஞனே! தாய்நாட்டுக்கு ரத்தம் சிந்து, அதிவேகமாக வாகனம் ஒட்டி ரோட்டில் சிந்த இல்லை!!!
ரௌத்திரம் பழகு என்றேன்
போர்வீரனே! கொடியவனிடம் மக்களை காப்பாற்ற, உனக்கானவருக்க மட்டும் இல்லை!!!
தாழ்ந்து நடவேல் என்றேன்
தோழனே! வயதானவர்க்கு தான் ஐய்யா, பணம் படைத்தோரிடம் யாசிக்க இல்லை!!!
தோல்வியால் கலங்கேல் என்றேன்
சிரஞ்சிவியே!வாழ்க்கையில் தோற்றுப்போனதுக்கும், தேர்வுகளில் தோற்றத்துக்கும் இல்லை!!!
கை தொழில் போற்று என்றேன்
உழைப்பாளியே! உன் புத்தியின் மூலதனமாக, பிறர் உழைப்பில் இல்லை!!!
ஆண்மை தவரேல் என்றேன்
சிங்கமே! பெண்களை பாதுகாக்க, மீசையை முறுக்குவதில் மட்டும் இல்லை!!!
கெடுப்பது சோர்வு என்றேன்
வள்ளலே! கொடுப்பதில் தான் உன் வாழ்வு, வீணாக பிறரை கெடுப்பதில் இல்லை!!!
ஓய்தல் ஒழி என்றேன்
சுறுசுறுப்பானவனே! தளத்தில் போய் போர் பழகு, கைபேசியின் விரல்களின் விளையாட்டில் இல்லை!!!
நேர்பட பேசு என்றேன்
பேச்சாளனே! சுற்றும் முற்றும் பார்த்து நெறிப்பட பேசு, படபடப்புடன் அர்த்தமற்று இல்லை!!!
நன்று கருது என்றேன்
நல்லவனே! எதிர்த்த தீயோன் இறந்தாலும் வருத்தப்படு, அதில் ஆனந்தபட இல்லை!!!
வீரியம் பெருக்கு என்றேன்
பலசாலியே! உன்னை விட பல பலம் படைத்தோரிடம், பெற்றவர்களிடம் இல்லை!!!
புதியன விரும்பு என்றேன்
புதியவனே!உன் சிந்தனையை,
இருப்பதை விற்று புதிதாக இல்லை!!!
வொவ்வுதல் நீக்கு என்றேன்
மதுவை நீக்கு, நீ மட்டும்
நீனைத்தால், பிறர் சொல்வதால் இல்லை!!!
வெடிப்பர பேசு என்றேன்
வெடிப்பவனே! சமூகத்தில் வெளிச்சம் போட்டு பேசு, தீயவரிடம் சிக்கி கொள்ளும்போது இல்லை!!!
என்றேன் என்றேன்-அன்று
உரக்க சொல்கிறேன்-இன்று
நீ ஏற்றுக்கொள்ளும் வரை! மானிடரே!
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
மீண்டும் மீண்டும் பிறப்பேன் , நவீன கால பாரதியாக
உன் எண்ணத்தில் எழுச்சியுடன்!!!