STORYMIRROR

Deenadayalan Adimoolam

Classics

3  

Deenadayalan Adimoolam

Classics

தாய் மொழி

தாய் மொழி

1 min
615


புதையாத எங்களின் புதையல்...

அழியாத எங்களின் தேய்யா தமிழ்!


எங்களின் பிறப்பு--தமிழுக்கே அர்ப்பணிப்பு!

எங்களின் வளர்ப்பு-- ஒழுக்கத்தின் வழிநடப்பு!

தமிழுக்கு சேதம் என்றால் நெஞ்சம் அடையுது கொதிப்பு

வேற்று மொழியின் திணிப்பு-- கேட்கவைப்போம் மணிப்பு!

கர்ணனின் நட்புயிலக்கணம் நம்மண்ணில் இருந்து உலகிற்கு சென்றதுதான்

அதன் சிறப்பு!!

என் தமிழை காக்க, என்றுமே எங்களின் கண்களில் விழிப்பு!


இரு வரியில், உலக மனிதனின், தலைவிதியை சொன்னவன் என் வள்ளுவன்!


வளைவுகள் உள்ள தமிழ் மொழியில் பொட்டு வைத்த பெண்ணியம் உள்ளதாளோ .....

உலக மொழிகளுக்கு எல்லாம் தாயாக உருவேடுத்தாயோ !


தமிழ் மொழி தமிழனுக்கு வாழ்வில் வீசும் ஒளி!

தாய் மொழி என்றும் காட்டும் சிறப்பான வழி!


பல மொழிகளில் இல்லாத ஒன்று, சகமனிதனுக்கு தமிழ்வழியில் கொடுக்கும் மரியாதையில் உண்டு!!


தமிழ் நாட்டு பெண்ணை, உன் வீட்டுக்கு பெண் எடுத்து பாரு, 

உன் சமுதாயம் போற்றி புகழும் காது பட கேளு..


தமிழனின் உணவை உண்ணு, அறுசுவையில் அடைவாய் மனம் நிறைவு...


பல ஆயிரம் ஆலயங்களை கொண்டது தமிழனின் ஆன்மீக உணர்வு..


ஏழு கோடி மக்களின் உறவு, 

நொடி பொழுதில் ஒன்று திறளும் பாரு...


ஆங்கிலம் பேசுவதில் பெருமை வேண்டாம்,

பழையது என்று ஒதுக்கவும் வேண்டாம்,

தமிழ் பேசுவதில் வெட்கம் வேண்டாம்,

தமிழ் பேசும் தமிழன் என்று சொல்வதில் ஆணவம் வேண்டும்,

சக தமிழனுக்கு நாம் தோள் கொடுக்க வேண்டும்!!


தோப்பு-துறவு-தோட்டம் எங்களுக்கு அது கூட தானே கொண்டாட்டம்,  

தமிழனுக்கு இல்லை உணவு திண்டாட்டம்..


நிலம் புலம் தானே எங்களுக்கு 

 ஐம்புலமாக அமைந்து!!

  


தென்னை மர நிழலில் இளைப்பாரு, உன் தாகத்துக்கு இருக்கு இளநீரு..


எங்களின் ரத்தத்தில் கலந்த தமிழ் மண்ணின் நீரு, 

பழகியவருக்கு வடியுது கண்ணீரு...


பரம்பரியமும் விவசாயமும், எங்களின் உயிர் சுவாசம்!!

நிறம்தான் எங்களின் அடையாளம் அதுவே நிரந்தரம்..

தமிழ்நாட்டு ஆண்களின் கோபம், ஜல்லிக்கட்டில் புரியும் எங்களின் போர்குணம்...

தமிழனின் படைப்பில் பல காவியம், அதற்கு நிகரில்லை எந்த மொழியும்...



செங்குருதியில் ஊரிய இனம், செந்தமிழுக்கே அர்ப்பணம்.. என்று உரைப்பேன் தினம் தினம்....





Rate this content
Log in

Similar tamil poem from Classics