STORYMIRROR

Deenadayalan Adimoolam

Inspirational

4  

Deenadayalan Adimoolam

Inspirational

வெள்ளை மனசு கருப்பு நிறத்தான்

வெள்ளை மனசு கருப்பு நிறத்தான்

1 min
207

உலகெங்கும் தேடினேன் -- என் தலைவன் திருமங்கலத்தில் பிறந்தான் அன்று!!

மதுரையில் வளர்ந்த என் கருப்பு மாணிக்கம்..

என்றுமே, நம் மக்களுக்கு காட்டுவாய் உன் வெள்ளைக்குணம்...

விழிகள் சிவந்த சினத்தில் உதிரும் உச்சரிப்பு தமிழுக்கு என்றுமே, ஓர் இலக்கணம்....

பல படங்கள் நடித்தாய், தமிழ் இளைஞர்களுக்கு பற்பலப் பாடங்கள் எடுத்தாய்...

காக்கி உடை, ராணுவ உடை, அதுதான் பல படங்களுக்கு உனக்கு துணை..

பற்பலக் கோணங்களில் எதிரியை உதைத்தாய், உன் ரசிகனை கால்லடியில் விழவைத்தாய்....

காந்துக்கு போட்டியாகயில்லை, உன் காந்த பார்வையால் ரசிகர்களை ஈர்த்ததால் விஜயகாந்தானாய்...

சண்டை காட்சிகளில் எட்டா சுவர்களில் உன் பாதம், திரையரங்குகளில் ரசிகர்களால் உனக்னே கரகோஷம்...

பலரும் யோசிப்பார், உன் அறையில் அனைத்து மதக் கடவுளையும் பூஜிப்பாய்... 

பத்தாம் வகுப்பு தாண்டவில்லை, சட்டசபையில் குதித்தாய்...

உனக்கான ஒரு சின்னம், சட்டசபையில் என்றுமே! நீதான் எங்கள் சிங்கம்...

நாட்டில் பல நடிகன் நடித்தும், நாடு போற்றிய தலை சிறந்த குடிமகன் என்ற பட்டம் உனக்கு மட்டுமே!!

அன்று!!

சில படங்களில் இறுதியில் நீ பிரிவாய், எங்கள் மனதில் இன்றும் என்றுமே பிரியாமல்...... 

இன்று!! 

நாங்கள் இறைவனை மன்றாடுகிறோம் என்றுமே நீ உயிர் வாழ!!

பல ஆயிரம் குடும்பங்கள் உன்னால் வாழ!!

கோட்டையில் கேப்டனாக என்றுமே நீ ஆள !!


 - விரும்புகிறேன் உன் ரசிகனாக என்றும்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational