பேய் பயம்
பேய் பயம்
வளரும் வயதில் பேய் பயம் காட்டுவர், உதிக்கும் தைரியத்தை அன்றே அடக்குவார்..
பிறர் நிலம் பிடிங்கி நிலைப்பான்--நிலப் பேய்கள்
பலர் பணம் சுரண்டி வாழ்வான்-- பணப் பேய்கள்
பலரை பிணமாக விடுவான் -- சுயநலப் பேய்கள்
மக்களை மோத வைத்து விளையாடுவான் பிணம் தின்னி-- ஜாதிப் பேய்கள்
மக்களின் அழுகுரலில் ஆதாயம் அடைவான்-- குள்ளநரிப் பேய்கள்
லஞ்சம் கேட்டு பஞ்சம் ஆக்குவான் கல்நெஞ்சப் பேய்கள்
தான் உயர பிறரை கிழே தள்ளுவன் பதவி--வெறிப்பேய்கள்
எளியவன் உழைப்பில் ரத்தம் உறிவான் -- காட்டேரிப்பேய்கள்
தன் மனைவியை தவறாக நினைப்பான் --
சந்தேகப் பேய்கள்...
பிறர் மனைய நோக்கி ஆண்மை தவறும் ஆண் பேய்கள்..
மொட்டு ன்று பாராமல் முட்டி தீர்பான் -- காமவெறிப்பேய்கள்..
நியாயம் ஒழித்து தர்மத்தை தோற்கடிக்க போராடும் --
அதார்ம பேய்கள்
லட்சியவாதி என்ற போர்வைக்குள் -- ராட்சதப்பேய்கள்
இந்தியா மண்ணில் பிறந்து, வளர்ந்து, படித்து.... பின்
வெளி நாட்டு மண்ணனிடம் இணைந்து, பிணைந்து குறை கூறி திரியும் இந்திய வம்சவாளிகளே.
நீதிமன்றமோ!! பல பொய்களை அரங்கேற்ற, நீதியை மறைக்க போராடும் ஒரு கூடாரம்..
நாடாளுமன்றமோ!! நாட்டு மக்களை பாடுப்படுத்த திட்டம் திட்டுவாதற்கான ஒரு மண்டபம்...
காவல் நிலையமோ!! நீதியை அழித்து கொன்று குவிக்கும் அரசாங்க மயானம்...
பேய் பயம் என்பது , மனித உடலை விட்டு வெளியே அலையும் பேய்களை கண்டு அல்ல......
மனிதன் மனதினுள் இருக்கும் பேய்களை கண்டு தான்...