STORYMIRROR

Deenadayalan Adimoolam

Others

4  

Deenadayalan Adimoolam

Others

நீட்டுக்கு உயிர் நீக்காதே

நீட்டுக்கு உயிர் நீக்காதே

1 min
298


உன் பிரிவு! 

எங்களுக்கு அதிர்ச்சியாய், தேர்வில் தேர்ச்சியாகமாட்டாய் என்று உரைத்ததோ...

உன் உள்ளுணர்ச்சி!


நீட்டின் துக்கத்தால்!

தூக்கு கயிற்றுக்கு இடையில் தலை நீட்டாதே...

உன் புத்தி கூர்மையால் கயிறு அறுபடாதா... 

எங்கள் ஏக்கத்தால்!


சாவை சந்திக்கும் உன் ஆத்மபலம்- ஏன்இல்லை  

மனோபலம் நீட் தேர்வை முறியடிக்க....


நீட்டால் ஏன் உயிர் நீத்தாய் எங்கள் நெஞ்சங்களைl சோகத்தில் மூழ்கடித்தாய்..


மருத்துவராய், 

எங்களை காப்பாற்ற வருவாய் என்று எண்ணினோம்-இன்றோ உன்னையே காப்பாற்றி கொள்ளாமல்...


பல உயிர்களை விழுங்கிய நீட்டுக்கு நீதி கேட்க எந்த நாதியும் இல்லையோ...


உன் இறப்புக்கு யாரும் இங்கு பொறுப்பும் இல்லை....

சிறப்பான எதிர் காலத்தை- உன் வெறுப்பால்,

இதய துடிப்பை தடுக்காதே!


மருத்துவர் என்ற சான்றிதழில் பெயர் பொறித்துவிடு,  

இறப்பு சான்றிதழில் பெயர் பெறாதே...


மாணவனே,  

தோல்வி பயம் வேண்டாம், தேர்வில் வெற்றி பெரும் நேரம்...


நீட்டுக்கு உன் புத்தியை தீட்டு,

நீட்டுடன் மோதி விளையாடு, வெற்றியை நிலை நாட்டு, போற்றும் உன்னை நம் தமிழ்நாடு!


எண்ணமும்-எழுத்தும்

உங்கள் தீதா



Rate this content
Log in