STORYMIRROR

Deenadayalan Adimoolam

Tragedy Crime

4  

Deenadayalan Adimoolam

Tragedy Crime

கனவு சிதைந்தது

கனவு சிதைந்தது

2 mins
403


அன்றோ! ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் வளரும் குழந்தையிடம், 

இன்றோ! ஜாதியை வைத்து மாறி மாறி கற்பழிக்கிறான் இந்நாட்டு சிறுமியிடம்!!!!


சித்திரம் போல உன்னை பாதுக்காக்க வேண்டிய உத்திரபிரதேசம் - உன்னை பத்திரமாக ஏன் காக்கவில்லை??? 


ஆண் என்ற அடையாளம் கொடுத்தவள் என் பெண், இன்று அவளை அடையாளம் தெரியாமல் ஆக்கியவன் ஓர் ஆண் மிருகம்..


ஓசையில்லாமல் ஆசையாக தொட்டிலில் உறங்க வைத்தேன்.... மகளே! 

உன்னை சீதைந்த சதையுடன், சத்தமில்லா சவப்பெட்டியில் பார்க்கவா!!


ஆசையுடன் வளர்த்தேன் உன்னுடன் பாசமாக இருந்தேன்..

ஐயோ !! உன்னை என் நாடு பாதுகாக்க மறந்ததோ!!!


உறங்கும் முன் உன் முகம் பார்ப்பேன், 

விடிந்த பின்னும் உன் முகம் பார்ப்பேன், 

மாலையுடன் புகைப்படத்தில் இன்று பார்க்கிறேன்!!!


எங்கள் குலதெய்வமாக வளர்ந்தாய் இல்லத்தில்,

எந்த ரூபத்திலும் தெய்வம் வரவில்லை நீ இறக்கும் தருணத்தில்!

என்றுமே, அணையா விளக்காய் எங்கள் உள்ளத்தில்!


உன் பிள்ளை பார்த்து இறப்பேன் நினைத்தேன், 

இறப்பு செய்தியால் இரு கண்கள் இருந்தும் குருடனாய் நின்றேன் இப்போது!!!


அடேய் ஆணே!! பெண்ணை நீ பாதுகாக்க தான்,  

பதம்பாக்க இல்லை,  

உன் தசை பலுவால் அவள் சதையை, சிதைக்கவும் இல்லை... 


அவள் கதறும் வலி- ஏன்

நீ உணரவில்லை - உன் 

தாயின் பிரசவ வலி.. 


அவள் ஆடையை கிழிக்கும் எண்ணம் - ஏன் இல்லை 

உன் அன்னை தங்கையிடம்... 


அவள் மார்பகங்களை தீண்டுகிறாய், 

பெற்றவருக்கு மாரடைப்பு செய்தியை தருகிறாய்.. 


அவள் தொடை இடையில் திணிக்கிறாய்,  

ஏய் மிருகமே! வந்தயிடம் மறக்கிறாய்.. 


கை கால்களை நசுக்கி ஒடித்தாய், மலர்ந்த பூவை கசக்கி எறிந்தாய்... 

தலை முடியை இழுத்து பிடித்தாய், இடை ஓடிய உன் காமம் தீர்த்தாய்... 


சினிமாத்துறையும், இனையத்தளமும் ஆணின் மனதில் ஆபாசம் விதைக்குது, கலாச்சாரத்தை நாட்டு பெண்களும் மறக்குது.. 


பெண்ணே!!

எங்களுக்கு நீ கடவுளின் படைப்பு 

எதையும் சாதிக்கும்-உன் பிறப்பு

ஒழுக்கமிக்க உன் வளர்ப்பு 

சமூகத்தில் இல்லை அம்மா.... உனக்கு பாதுகாப்பு!!!


இந்தியவின் வரைபடம்!!

சேலை போர்த்திய தாயை போல அவள் சேலையை உருவாதே,  

பிற நாடுகளுக்கு இடையே நம் மண்ணின் மானத்தை இழக்காதே...


பொட்டை என்று எண்ணாதே!! குற்றவாளியின் நெற்றி பொட்டில் சுட்டு தல்ல இந்திய பெண்களின் கைகளில் துப்பாக்கி ஏந்தும் நேரம் வரும்... 

அதை நம் தேசம் - பலருக்கு சரித்திரம் சொல்லும்.... 


வாய்மையும், நீதியும், நேர்மையும் இனியும் இல்லையேல், 

பெண்ணை - தெய்வமாக சிலைகளில் மட்டும் தான் வழிபடப் படுவாள்... 


போதும் அரக்கனே!!!

உன் மிருக வேட்டைக்கு 

என் பெண்ணை இரை தீர்க்காதே!!

இரையாய் விழுங்காமல் 

இறைவியாய் வணங்கிடு...

உன்னை பெற்றவளும்

அவளை பெற்றவனும்

உன்னை போற்றுவார்கள் - இல்லையென்றால் 

உன் மரண படுக்கையில்

எரிந்து சிதைய தயாராக இரு!!!


இப்படிக்கு

பெண்ணை ஈன்ற 

ஒரு பெற்றவனின் கதறல்!!


வருத்தத்துடன் கோபத்துடனும்

பதிவு செய்யும் 

உங்கள் தீதா



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy