STORYMIRROR

Deenadayalan Adimoolam

Others

4  

Deenadayalan Adimoolam

Others

நட்புக்கூடல்

நட்புக்கூடல்

1 min
188

"மாற்றம்" ஒன்றே மாறாதது, விதிவிலக்கா இருப்பது - என் நட்பு மட்டுமே !        

இதுவே நட்பின் அதிசயம்!


நட்புக்கு ஆண்-பெண் 👫🏻வேறுபாடு இல்லை, 

நட்புக்கு ஜாதி-மதமும் இல்லை, 

நட்புக்கு வயது👴🏻 இல்லை,  

நட்புக்கு ஓய்வு🧖🏻‍♂️இல்லை,        நட்புக்கு தன்னலம்😏 இல்லை, 

நட்பு இல்லாதவன் மனிதனே👤 இல்லை! 

இதுவே நட்பின் பண்பு!


நட்பால் விழுந்தவர்👎 யாரும் இல்லை, 

வாழ்ந்தவர்கள்👍 கணக்கே இல்லை! 

நட்பை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை,      

 நம்பாமல் கெட்டவர் பலருண்டு!     இதுவே நட்பின் சாரம்சம்!


நட்புக்கு கோயில் தேவையில்லை, நட்பே ஒரு கோயில் தான்- அந்த கருவறையில் கர்ணன் சிலையிருந்தால் தப்பேயில்லை!   இதுவே நட்பின் புனிதம்!


மச்சி,மாப்ள, மாமா என்ற வார்த்தையில், இளமைக்கு திரும்பிய நேரத்தில்,    

சந்தோஷம் எழுந்தது என் மனதின் ஓரத்தில்!

இதுவே நட்பின் யதார்த்தம்!


நண்பரை👨🏻 ஆழமாய் புரிந்துக்கொள்,   நட்பை ஆலமரமாய்🌳 வளர்த்துக்கொள்! இதுவே நட்பின் ஆழம்!


"நாலு பேரை" 👥பற்றி என்னும் சொந்தங்களை விட, 

எண்ணி நாலு நண்பரை 👭🏻👬🏻 வைத்துக்கொள்- உன் ஆயுள் காலத்தை கூட்டிக்கொள்!   

இதுவே நட்பின் குணம்!


சொந்தம் தொலைந்ததால், நட்பை தேடாதே🧐,  

சொந்தம் இணைந்ததால், நட்பை தொலைத்து விடாதே🙃

நட்பை நடிப்பாய்🧐 பார்க்கதே,

நட்பு முதுகில்🤭 குத்தினாலும், புறம் பேசாதே, 

நட்பில் குறை🤫 பார்க்காதே, 

குறைத்து மதிப்பிடாதே,    

இதுவே நட்பின் விதி!


உன் நண்பன் யார் என்று சொல்லு, உன்னை பற்றி சொல்கிறேன்!      என் நண்பனிடம் அவதூறு மட்டும் கூறிவிடாதே, எனக்கென்று அசையும் சொத்து என் நட்பு! இதுவே நட்பின் பலம்!


தொப்புள் கொடி உறவு இல்லா, நம் பெற்றோரை👨‍👩‍👦‍👦 உரிமையுடன் உறவுக்கொண்டாடும் ஒரே உறவு நட்புதான்! 

இதுவே நட்பின் பந்தம்!


குழந்தை👶🏻 பருவத்தில்- 

கள்ளம்கபடமில்லா நட்பு,

பள்ளி👦🏻 பருவத்தில்- துள்ளிஎழும் நட்பு,

கல்லூரி🧑🏻 பருவத்தில்- துணிச்சல் மிகுந்த நட்பு,

சகபணியிடத்தில்👨🏻- தோள் கொடுக்கும் நட்பு,

நாற்பது வயது பருவத்தில்👨🏻‍🦱-தெம்பு கொடுக்கும் நட்பு,

அறுபது 👨🏻‍🦳வயது பருவத்தில்-சிரித்து மகிழ வேண்டும் நட்பு,

ஒய்வு பருவத்தில்👴🏻- நினைவு அலைகளாய் இருப்பது நட்பு! 💝  எ


என்றும் நட்பு! எதிலும் நட்பு! 

இதுவே நட்பின் சிறப்பு! சாராம்சம்! தனித்துவம்!


சகலமும் வேண்டாம், சகலமும் நிறைந்த உன் நட்பு மட்டும் போதும்!


என்றென்றும் நட்புடன்

 🤝🏻தீதா🤝🏻


Rate this content
Log in