STORYMIRROR

Deenadayalan Adimoolam

Romance

4  

Deenadayalan Adimoolam

Romance

பழையது கனியுது

பழையது கனியுது

1 min
182


உனக்காக நான் எனக்கு நீ...


இருமனம் இணைந்த திருமணம்....

பூக்கள் வாடினாலும் மனம் வீசும் நந்தவனம்!!!


கொலுசின் சிணுங்கல் குறைய நடையின் வேகம் குறைந்ததோ!!

வலையல் வரிசை குறைய காதின் ஓசையும் சுருங்கியதோ!!

தலை முடி நிறைய நரைய, என் ஆசைகளும் வழிந்து நிரம்பியதோ!!

வெண்ணிற பற்கள் உடைய, சொற்களின் தெளிவும் உடைந்ததோ!!

சேலையின் சுற்று பெறுக பெறுக, நீ என்னை சுற்றிய நாட்கள் மறக்குமோ....

எடை குறைய குறைய இதயத்தில் ஆசை கணம் கூடுகின்றதே!!


அதிகாலையில் காபியோ என் மூக்கை துளைக்க..

பல மணி நேரம் தொலைக்காட்சி முன் முடங்கி கிடக்க..

வெளியே சென்று நீ வரும் வரை என் மனம் பதைக்க..

முட்டு தேயந்து நம்மால் முடியவில்லை வெகுதுரம் நடக்க..

பார்வை குன்றியும் ருசியாக நீ சமைக்க..

இறுதி காலங்களில் நானோ மறதியில் தவிக்க..

உறங்கும் நேரங்களில் என் கால் பாதங்களை பற்றி நீ கிடக்க..

தூங்கும் வரை உன்னிடம் உரையாடி நான் இருக்க..

மங்கள முகத்தை வாழ்வு முடியும் வரை நான் பார்க்க..

இவ்வுலகில் இருந்து உனக்கு முன் நான் இறக்க...

ஆனாலும், வேண்டுகிறேன் நம்மை இணைக்க!!!


நீ வரும் முன் இதயம் வெறும் சிதையாக, இணைந்தாய் உயிர் தரும் துடிப்பாக...

கம்பிர நடையோ மூட்டு மங்கி, என் தோழியே தோளின் துணையாக..

பல வினாக்கு, நீதான் என் வாழ்வின் பதிலாக..

முகம் சுருங்கியும் நீதான் என் தங்க சிலையாக..

நீ பாடும் பாட்டுக்கு தொடர்வேன் எச பாட்டாக..

வீடு சேர்வேன் தேனீக்கள் வாழும் தேன்குடாக..

போரிடுவேன் எமனிடம் உன்னை மீட்க என்னை விலையாக கொடுத்து, 

அவனோ விட்டு செல்வான் அதான் விளைவாக....


வேண்டியும் நீ எனக்கு நீண்ட நாட்களாக - ஆனால் இயற்கையிடம் நின்றேன் தோற்றவனாக...

நான் மட்டும் தான் உனக்கு துணையாக..

இறுதியில் என் குறுதியின் வேகம் குறைய விட்டு சென்றுவிடுவாயோ தனியாக..

இருளை நினைத்து பயமாக.....


உயிரிலும் உள்ளத்திலும்

என்றென்றும் தீதா


Rate this content
Log in

Similar tamil poem from Romance