STORYMIRROR

Deenadayalan Adimoolam

Others

4  

Deenadayalan Adimoolam

Others

நிவர்- அமைதியா ? நிம்மதியா?

நிவர்- அமைதியா ? நிம்மதியா?

1 min
279

இயற்கையின் பிடியில் நம் நொடிகள்!!!!


புயலின் செயலால் வயல்களுக்கு நாசம்..

அரசின் முடிவால் மக்களுக்கு சேதம்.

உயிரும் பயிரும் நிவருக்கு நிகரில்லை,

உம் பலம் அறியாமலுமில்லை!!!


நிவர் வேகத்தின் சுழற்சி , மக்களுக்கு பேர் அதிர்ச்சி....

நிவர் நகர்ந்து வலுவை இழந்தால் நம் நகரம் வாழும்!!!


கடக்காதே! கடக்காதே! 

எங்கள் சென்னை கரையை, 

நிக்காமல் கொட்டும் அடை மழை, நம்மை தாக்க வந்த நிவர் அலை,

உயர் சுவராலும் தடுக்க முடியாத நிவரை, 

கேட்டுக்கொள் நம் அரசின் அறிவுரை!!!


ஏரிகளின் உபரி நீரோ வெளியேற்றம், 

நிக்காத மழையினால் நடுரோட்டில் நீரோட்டம்,  

போக வழி தெரியாமல் விழி பிதிங்கி திண்டாட்டம்!!!


சில காலம் கொரோனாவில் கழித்தோம்,  

நவம்பர் மாதத்தில் நிறமற்ற நிவரில் முழித்தோம், வரும் காலத்தில்...

இயற்கையிடம் போதும் என்று வேண்டினோம்!!!


வருணன் வருவானா என்று ஏங்கும் விசுவாசமுள்ள விவசாயி,  

மறு பக்கம் மழைவேண்டாம் என்ற சுகவாசி,

இயற்கையின் பிடியில் நாம்!!!


தண்ணிர் பஞ்சம் போக்க வந்த நிவர்ரா.. நிவர் நமக்கு நிவாரணமா---இல்லை,  

நம்மை பழி வாங்க வந்த வருணனா.


இயற்கை அன்னையே!!

உன் அமைதி தான் எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை தரும்,

என்றுமே உன் பிடியில் நாங்கள்!!


என்றென்றும் 

எண்ணத்திலும்-எழுத்திலும்

புயலாய் தீதா🙏


Rate this content
Log in