Prompt 1 - போர் (war)
Prompt 1 - போர் (war)
கூர் வாள் சண்டையிட்டு
ஊர் இரண்டுபட்டு
சீர் குலைந்து நிற்கும் காட்சி
அதற்கு இந்த இயிற்கையே சாட்சி
இன்னும் எத்துனை காலம்
இப்படி அமைதியின்றி வாழும் கோலம்
சாதி வெறியா சமய வெறியா மத வெறியா இன வெறியா
மானிட குலம் கண்டறியும் காரணம் யாமறியேனே
மண்ணும் பொன்னும் செழித்தாலும்
காயும் கனியும் மலரும் பூத்துக் குலுங்கினாலும்
கொன்று அழிக்கும் வஞ்சம்
நாடெங்கிலும் பஞ்சம்
மன்னன் வாழ மடிகிறாயா
இல்லை உன் தாய் மடி சாய்கிறாயா
வீரன் என்ற பெயர் நாட்டை காக்க வாழ்ந்த காலம் போய்
வீட்டையும் நாட்டையும் சேர்த்து அழிக்கும் காலத்தில் வாழ்கிறோம் நாம்
விடியலுக்காக காத்திருக்கும் பறவையைப் போல்!!!