விடுதி- விடுதலை
விடுதி- விடுதலை
விடுதிக்கு வேணாமா
வீட்டுலேயே இருக்கேன் மா
இனிமே நா படிப்பேன்
நீ சொன்னதெல்லாம் கேப்பேன் மா
வேலைக்கு போணும்னு என்ன தனியா விடாம
தோள்ளையே தூக்கீட்டு
தலையில வெறகோட
ஒரு கிலோமீட்டர் நடப்பீயே
அந்த நெனப்பெல்லாம் வந்துச்சும்மா
உன் புள்ள மனம் கலங்குச்சம்மா
விடுதிக்கு வேணாமா
வீட்டுலேயே இருக்கேன் மா
அஞ்சாங் கிளாசுல
கல் தடுக்கி விழுந்தப்போ
கல்ல நீ அடிச்சு
ஓ முந்தானைல கண் தொடச்ச
அந்த நெனப்பெல்லாம் வந்துச்சு மா
உன் புள்ள மனம் கலங்குச்சம்மா
விடுதிக்கு வேணாமா
வீட்டுலேயே இருக்கேன் மா
எவ்ளோ நாள் ஆனாலும் கண்ணுக்குள்ளே இருந்தா போதும்
பெரிய படிப்பில்லாம் வேணா
நாம சோறு கஞ்சி குடிச்சா போதும்
விடுதிக்கு வேணாமா
வீட்டுலேயே இருக்கேன் மா