பருவ மழை
பருவ மழை
வெயிலின் கோபம்
மண்ணை பிளந்த பின்
படர்ந்த மெல்லிய சலனம் மறந்து
சில துளிகள் விழ, அது இம்மண்ணில் மருந்து
மழை முத்து, முதல் முத்தம்
குழந்தைகள் சத்தம்
பள்ளியின் அமைதி
வாண்டுகள் அசதி
கத்தி களித்து கண்டு மகிழ்ந்து
சூடான தேநீரும்
சுகமான ராஜா பாட்டும்
நெஞ்சை நனைக்க
வரும் முதல் பருவ மழை
எல்லா மானுட பருவமும் விழும் வலை

