வா....
வா....
நாம் சென்ற இடமெல்லாம் , நான் சென்று, உன் நினைவு துகள்கள் சேர்த்து,
தொடர்ந்தேன் நம் காதலை,
தனிமை தந்த தன்இருள் போக்க,
உன் பிரிவு தந்த வலிகள் மறக்க,
சிரித்து களித்து சிகரங்கள் பறக்கிறேன்,
சிறகுகள் ஏனோ உன் பெயரை துதிக்கின்றன,
மரத்து போக வழி இருந்தால், மறந்து போக தேவையில்லை,
பிரிந்துபோக மனமிருந்தால், கவிகள் எழுத தேவையில்லை,
என்றோ ஒரு நாள் நினைவிருந்தால்,
திரும்பி வந்துவிடு .. உனை ஏற்பேன்