தீர்க்கதரிசி
தீர்க்கதரிசி
உன் கண்களின் விசையால்,
என் கன்னங்கள் சிவந்ததேனோ?
உன் சிரிப்பின் துகள்களை,
என் இதயம் ஈர்த்ததேனோ, புவியின் மேல் நான் கொண்ட தேடலுக்கும்,
தமிழின் மேல் நான் கொண்ட காதலுக்கும்,
விதிவிலக்காய் நீ !
அடிமைத்தனம் போக்க நான் எழுதிய கவிகளெல்லாம்,
என்னை ஏளனம் செய்கின்றன,
உன் அன்பிற்கு அடிமையானதை அடுத்து, தாகங்கள் அடங்கும் வரை,
காலங்கள் கரையும் வரை,
மோகங்கள் முடியும் வரை,
தேகங்கள் சுருங்கும் வரை,
உன் காதலின் தீர்க்கதரிசியாய் நான்