STORYMIRROR

Saravanan P

Romance Classics Inspirational

4  

Saravanan P

Romance Classics Inspirational

இனிய துணையே

இனிய துணையே

1 min
14

ஆண்: இந்த நொடிபொழுது உன்னுடன் இருப்பதுபோல்,

என் இறுதி நொடி இருந்திட விரும்புகிறேன்,

உன்னுடன் சேர்ந்து,

இன்பம், துன்பம் கடந்து,

நம்முடைய வேதனைகள் தீர்ந்து,

உன் கனவுகளுடன் நீ வானில் சிறகடிக்க,

உன்னுடன் நானும் உடன் வருவேன்,

இன்னொரு பறவையாய்,

உன் தடைகள் நீ தகர்க்க உதவுவேன்,

உன்னுடைய வெற்றி கண்டு ஆனந்தம் கொள்வேன்.

பெண்: பேச விசயங்கள் இல்லையென்ற நிலை வந்தால்,

பேசிக்கொள்ள காரணங்கள் தேடி,

ஒன்றாய் செல்வோம்,

வெறுமையாக வாழ்வில் நாம் உணரும் தருணம்,

நாம் கண்ட முதல் நொடியை அசை போடுவோம்,

அதை மீண்டும் நடித்து பார்ப்போம்,

உன் துன்பங்கள் கலைய நான் முயல்வேன்,

சமையல் இருவரும் செய்வது போல்,

இந்த உறவையும் சுவைக்க செய்வோம்,

ஒரு சுவை மட்டும் இருப்பதில்லை,

மகிழ்ச்சி எப்போதும் இருப்பதில்லை,

அனைத்தையும் சுவைப்போம்,

கை கோர்த்து இருவரின் பாதையிலும் நடப்போம்.



Rate this content
Log in

Similar tamil poem from Romance