STORYMIRROR

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

கண்ணன்

கண்ணன்

1 min
9

எட்டாவது குழந்தையாய் பிறந்து,


தாய்,தந்தைக்கு எட்டாத இடத்தில் வளர்ந்தானே,


யசோதா,நந்தனின் செல்ல குழந்தையாக,


கோகுலத்தில் தவழ்ந்தானே,


தாய்மாமன் அனுப்பிய அசுரர்களை,


கொன்று இன்னலில் இருந்த மக்களுக்கு,


நிம்மதி அளித்தானே,


மறுபுறமோ,


வெண்ணெய் திருடி,


பானைகள் உடைத்து,


சேட்டைகள் பலவற்றை புரிந்தானே,


கோவர்த்தன மலையை ஒரு விரலில் உயர்த்தி,


இந்திரன் ஆணவம் குறைத்தானே,


ஆயிரம் தலை கொண்ட காளிங்கன் தலையில்,


ஆனந்த நர்த்தனம் புரிந்தானே,


மதுரா சென்று மாமனை கொன்று,


அனைவரையும் காத்தானே,


கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து,


தங்கை பாஞ்சாலியின் மானம் காத்தானே,


குழம்பிய காண்டீபன் மனத்திடத்தை மீட்க,


கீதை சொல்லி தந்தானே,


புல்லாங்குழல் வாசித்த கைகளால்,


பாஞ்சன்ய சங்கின் நாதம் ஒலித்து,


பாரத போரை தொடங்கி வைத்தானே,


தர்மம் காக்க,


யுத்த நிதிகள் மீறி சென்றானே,


காலத்தினுள் உட்பட்டு,


காந்தாரி சாபம் ஏற்றுக்கொண்டானே,


தன் குலம் அழியும் காட்சியையும் கண்டானே,


வேடனின் அம்பு காலில் பாய,


மரணத்தை ஏற்றுக் கொண்டானே,


அந்த வேடன் படும் துன்பம் கண்டு,


அதையும் போக்கி வைகுண்டம் சென்றானே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract