கனவு கணவா
கனவு கணவா
இரவின் அருமை உன் நினைவில் இருக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும்
கண் மூடியவுடன் என் கற்பனை உலகம்..
இமைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு உன் இதய ராணியாக நான் நம் கனவுகளில்...
நினைக்கும் போதே❤
திருடா என் இதயத்தை மட்டும் இல்லை தூக்கத்தையும் திருடிவிட்டாயே...
உன் நினைவுகளால் உறக்கம் இல்லை என்பது கூட சுகம் தான்
ஐயோ சூரியன் வந்துவிட்டார், உன் அத்தையின் அழைப்பு விழிக்க சொல்லி...
போதும் கனவு உலகில் காதல் கவிதை எழுதியது
என் கரம் பிடித்து கூட்டிச்செல் உன் மாமியாரிடம் சண்டையிட்டது போதும் நம் அன்பு ஆயுள் சண்டையை ஆராமிக்கலாமா

