நிலா விடு தூது
நிலா விடு தூது


வெண்ணிலாவே வெண்ணிலாவே...
வான முகிலேறி
வண்ண மயில் சேர்ந்து
கான குயிலாய் பாடி
என் எண்ணம் சொல்லி வா வெண்ணிலாவே...
வெண்ணிலாவே வெண்ணிலாவே...
சொன்ன சேதி சேர்த்த பின்னே
கொண்ட சேதி சொல்வாயோ
சென்ற வழி மறந்தாயோ ...
வெண்ணிலாவே ...
பெண் அவளைக் கண்டு
உன் நினைவை இழந்தாயோ ...
அவள்,
தூதைக் கொண்டாளோ
இல்லை தன் அழகாளே
தூதுவனைக் கொன்றாளோ...
அவள் தன் அழகாளே உனைக் கொன்றாளெனில்
அது அவள் பிழை இல்லையே வெண்ணிலாவே...
மறு சேதி நீ சொன்னாலே
உன்னாலே நான் பிழைப்பேனே ...
வெண்ணிலாவே வெண்ணிலாவே....
எனக்காக தூது சென்ற வெண்ணிலாவே
நீ சோகத்தில் தேய்வதேனோ...
மறு சேதியை நீ சொல்லாமலே நான் அறிந்தேனோ
யார் என்ன சொன்னாலும்
நமக்கென நாமே என் அழகு வெண்ணிலாவே...