பிரிவுழல்தல்
பிரிவுழல்தல்
நாம் சென்ற இடம் எங்கும் என் தேடல்கள் தொடர்கின்றன
வீதி விளக்குகளில் ஞாபகங்கள் எரிகின்றன
மரித்த காதலுக்கு சுவாசம் ஏனோ
மரத்த வலிகளுக்கு மருந்துகள் வீனோ
என் மனதை வருடும் உன் வார்த்தைகளும்
என் உயிரை பறிக்கும் உன் பார்வைகளும்
இன்னும் இன்னிசையாய் ஒலிப்பதேன்
என் மறைந்த வெட்கம் விழிப்பதேன்
மை இட்ட கண்களுக்கு பொய் இட்ட உன் உதடுகள்
கேட்க நினைத்த கேள்விக்கெல்லாம்
பதிலாய் உன் மௌனங்கள்
வழியற்ற பாதைகளில் வலியாய் உன் சுவடுகள்
வேலியிட்ட நிலத்திலும் வேர்களாய்
உன் நினைவுகள்
வாடிப்போன பயிர்களுக்கு நீர்ப்பாசனம்
எனை தண்டித்த காதலுக்கும் சாப விமோசனம்
இலக்குகளை உன்னுள் தொலைத்து இனி நான் போவது எங்கே
இக்கவிதை வாக்கியத்தில் மடிகிறேன் இங்கே