உன்னவள்
உன்னவள்
உன் பார்வை சொன்ன கதைகள் என் பாட்டி சொன்ன கதைகள் போல ஆழமானது
உன்னோடு பேசிய வார்த்தைகள் அனைத்தும் என் பெயரைப்போல அழியாமல் என்னோடே பயணிக்கிறது
உன்னோடு நடந்த அந்த பாதைகள் முதல் நாள் பள்ளி போல மறவாமல் இருக்கிறது
இவை அனைத்தும் என் நினைவாக இருக்க நீ மட்டும் ஏன் என்னோடு இல்லை..
என்னை எடுத்து சென்றதற்கு பதில் உன் நினைவுகளை தந்து செல்லாமல் இருந்திருக்கலாமே
காயங்களோடு காத்திருக்கேன்
உன்னவள் ❤

