தந்தை இல்லா மகளின் காதல் போராட
தந்தை இல்லா மகளின் காதல் போராட
யார் கூறியது இந்திய நாட்டு எல்லையில் நிற்பது தான் கொடியது என்று
போய் கேட்டுப்பாருங்கள் தந்தை இல்லா மகளிடம்
கணவனாக தன் கனவில் சுமந்தவனுக்கும் கண்னுக்கு கண்ணாய் தன்னை வளர்த்த தாய்கும் இடையில் சிக்கி தவிக்கும் பாச போர் பற்றி
விரும்பியவனை விரும்பவும் மனமில்லாமல் அவனை வெறுக்கவும் இயலாமல் தவிப்பதை
ஏன் விரும்பியவனிடமே கூற இயலா நிலை
தாயின் பாசத்திற்காக அவளின் வளர்ப்பில் உள்ள கவுரவத்திற்காக தன்னையே கொடுக்கிறாள் மகள்
காதலனே வந்து கரம் பிடிக்க என்னியும் காதலை கூட சொல்ல மறுத்தவள் கேளுங்கள் அவளிடம் அந்த இரு உலகிற்கும் இடையில் தவிக்கும் வலி எப்படி என்று
இதை விடவா போர் பெரியது... இருக்கலாம்... போர் கூட சில மணி நேரங்களில் உயிரை எடுத்துவிடும் ஆனால் காதல் காலம் உள்ள வரை இருவர் மனதிலும் ஒரு அழியா வலியுடம் கூடிய காவியமாக இருக்கும்

