மறைக்கப்பட்டு மறக்கப்படுகிறாள்
மறைக்கப்பட்டு மறக்கப்படுகிறாள்


சேயாக பிறந்த போது..
தாயவள் மார்பில் நிறைந்திருந்தேன்..
மழலையாய் மடி தவழ்ந்து
தந்தையவன் முதுகிலே சுமையாகிருந்தேன்..
பள்ளிச் சென்றுவந்த போது
பக்கம் அமர்ந்தேன்..
கரம் பிடித்தாடினேன்..
பருவம் எய்திய போது
முகம் பார்த்திடாது..
வெட்கத்தில் மறைந்திருந்தேன்..
கல்லூரிச் சென்று வந்த போது
மடந்தையென்று மறைக்கப்பட்டேன்..
இன்று ஒருவனின் மனைவியென்பதால்..
உயிராகிய உறவுகளால்
மறக்கப்பட்டேன்..