தமிழன்
தமிழன்


அறிவீரோய் ! இத்தரணி தாங்கும் அறிவுடையோரே..
அச்சமடம் மடந்தைக்குணமாம் ஆடவர்க்கு நிறைவீரமாம்
இச்சை மதியொழிப்பின் வாழ்வை ஈகைநிறைக்குமாம்
உச்சந்தலை குளிர்ந்திடுமாம் ஊரான்வரின் விருந்தோம்பலில்
எட்டாப்பகை விளைபோர்க்கும் ஏடெழுதிய நெறியுண்டாம்
ஐய்யனுடன் ஐவரெனில் ஐய்யவர்க்கும் வீடொன்றாம்
ஒற்றுமை போற்றும் உலகோ ரெல்லாம்
ஓதிவளரும் தாய்த் தமிழ்க் குறவாம்
ஔவை நெறியே தமிழனின் வழியாம்..