அறுபத்து மூவர்
அறுபத்து மூவர்
சிவ சிவ
கவிதை நடையில் கதையாய் #திருநாளைப்போவர் புராணம்....
#நந்தனார் -1
நந்தன் ( கவிதை ) கதை !!
பூனூல் அணியா குலத்தவன்
சிவன்பாதம் சேர்ந்தனன்
மந்திரங்கள் அறியன்
வேதங்கள் அறியன்
சிவமே அறிந்தனன்
ஆதனூர் பறையர் குலத்தினில்
தலைவனாம் நந்தன்
தில்லை காண நாளை செல்வேன்
என நாளும் சொல்லி
சிவமே மனத்தில் கொண்டனன்
நெற்றியில் திருநீரும்
கழுத்தில் மாலையும்
வாயில் நமச்சிவாயமும் கொண்டு
பூனுல் அணியா அந்தணனாய்
இந்த பாவிப் பறையன்
உயிர்பலி கொடுத்து பூசைகள் வேண்டாம்
கடும் நோய்க்கு பூசாரி சூடிட வேண்டாம்
படைத்தவனுக்கே எதற்கு பலி வழிபாடு
சிவன் பெயர் சொல்லி போற்றி பேரானந்தம்
எனத் தன் கூட்டத்திற்கு கூறினான்
மாற்று சிந்தனை மனச்சிக்கல்-
பித்துப் பிடித்த மடையன் என
பலிபூசாரி சொல்லிட
சிவப்பித்தன் தான் என
பாடினன் நந்தன்
ஆதனூர் அந்தணர் நிலந்தனை
உழுது வாழ்க்கை நடத்தினன் நந்தன்
இவன் மக்கள் யாவரும்
இவனோடு உழுது
செல்வத்தை ஈட்டினர்
தில்லை செல்ல அனுமதி கேட்க
என்றும் அந்தணர் கேலி செய்தார்
பறையனுக்கு எதற்கு தில்லை
தில்லை சென்றால் இங்கே சோறு இல்லை
தொழிலே தெய்வம் என பதில்கள்
நந்தன் மனமோ சிவனையே நாடிட்டு
திருப்பங்கூர் செல்ல திட்டம் ஆயிற்று
அவன் மக்கள் சிலர் சேர்ந்தும் ஆயிற்று
பறையனுக்கு கோவிலில் என்ன
வேலை
என சிலர் வராமலும் ஆயிற்று
நந்தன் கோவிலுக்கு செல்ல
நந்தி சிலையோ உயர்ந்து
வழிமறைத்து நின்றது
நந்தன் பாடல் -1
பூனுல் இல்லை கோவிலுள் செல்ல
பாகையும் இல்லை கோவில் செல்ல
நந்திக்கு நந்தன் மேல் என்ன பகை?
சிவலிங்க தரிசனம் என் குலத்தார்
காண நந்தி தடை
மலைப்போலே நந்தி
இதுபோலே கண்டது இல்லை
இந்த பாவிப் பறையன்
உன்னைக் காணேனோ?
நந்தி நீயேயாயினும்
சற்று விலகாயோ?
என நந்தன் பாட.....
இறையனார் ஈசன் பாடல் -2
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
விலகாயோ நீ விலகாயோ
சிலை நீ என நான் அறிவேன்
சிலை நீ அதை நான் அறிவேன்
தில்லை செல்லாது இங்கே வந்த்திட்ட
நந்தன் தான் எனை காண விலகாயோ?
பறையனென்று உள்ளே வரமால்
தான் பறையனென்று உள்ளே வரமால்
மனதினுள்ளே என்னை நினைத்து
என்னை காணாது மனம்வாடும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
தில்லை கூட செல்லாது
உயர்தில்லை கூட செல்லாது
எனை காண மனம் ஏங்கி
மாந்தரோடு கூடி நின்று
நந்தன் தான் எனை காண விலகாயோ?
குலம்கொண்டு பிரித்தெடுத்து
கோவிலுள்ளே நுழையாது
மூடரவர் சொன்னதற்கு
பாவமாய் அங்கே நிற்கும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
என சிவனும் பாட
ஆங்கே சிலையும் விலகிற்று
ஆனந்த தரிசனம் கண்டனன் நந்தன் .
நற்றுணையாவது நமசிவாயவே.