STORYMIRROR

Tamil Anbu

Inspirational Children

5  

Tamil Anbu

Inspirational Children

உறவுகள்

உறவுகள்

1 min
513

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

வணக்கம்


வாழ்க வளமுடன்


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


 அன்பும், நட்பும், காதலும் கூட ஆரம்பத்தில் எதிர்பார்க்கப் பட்டு, பின் பிரமிக்கப் பட்டு, கடைசியில் மனசாட்சியே இன்றி சாதாரணமாக புறக்கணிக்கப்படுகிறது. 


இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் 

அன்பின்,

 நட்பின் , 

 உறவின், காதலின் ,

தோழமை அருமையும், அவைகள் எல்லாம் விட்டுச் சென்ற தனிமையின் கொடுமையும்.....புரியும்...


இரு பக்கமாக இருக்கும் போது இணைந்தே பயணிப்போம்....


 இல்லாதபோது தனிமமையில் தவிக்க விடப்படுவோம்....


உங்ககிட்ட சொன்னா நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்,


 உங்ககிட்ட சொன்னா நீங்கள் சரியாகிடுவீர்கள் என்று பகிரப்படும் துயரங்களிலும்


 நிறையவே நிறைந்திருக்கிறது அன்பு, பாசம், புரிதல், உதவி, அரவணைப்பு எல்லாம்.....


இவற்றையெல்லாம் பரிமாற , 

கொண்டாட, உயிர்ப்போடு வைத்திட, 

ஈர நெஞ்சத்தோடு இருக்க   

இரத்த பந்தம் தேவையில்லை. 

நல்ல எண்ணம் இருந்தால் போதும் நமக்கு கிடைப்பதெல்லாம் நமக்கான , வாழ்வில் கொண்டாட வைக்கும் உறவுகள் ...


 மகிழ்ச்சியான உறவுகள்,


 அரவணைக்கும் உறவுகள், 


ஆறுதல் சொல்லும் உறவுகள், 


கை தூக்கி விடும் உறவுகள்.....


இது போன்ற உறவுகள் கிடைத்தவர்கள் பாக்கியவான்களே....


இது இரு பக்க பரிமாற்றம் ...


நீயும் உதவி இருக்க வேண்டும்..... அப்படி செய்து இருந்தால் இயல்பாய் உனக்கும் கிட்டிடும்....


இவற்றுக்கு எல்லாம் மாற்றாக எல்லாவற்றையும் கடந்து செல்பவர்கள் நம்மையும் கடந்து சென்று விடுவார்கள்....


   🔹🔴🔹




❣️❣️❣️❣️❣️❣️❣️❣️


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational