STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

5  

Muthukumaran Palaniappan

Inspirational

பணமும் மனிதனும்.

பணமும் மனிதனும்.

1 min
500

நான் உன்கூட இருந்தால் நீ பணக்காரன்

நான் உன்னிடம் இல்லை என்றால் நீ ஏழை!


என்னை நீ மற்றவர்களுக்கு கொடுத்தால்

நீ தர்மவான்

என்னை நீ பிறரிடம் கேட்டு வாங்கினால்

நீ கடன்காரன் !


நீ என்னை உன் இஷ்டம் போன்ற செலவு செய்தல் நீ பொறுப்பற்றவன்!

நீ என்னை சிக்கனமாக சிறுக சிறுக சேமித்தால் நீ கஞ்சன்!


எப்பொழுதும் என்னை நினைத்தே வாழ்ந்தால் நீ பேராசைக்காரன் !

என்னை நீ வெறுத்தால் நீ சன்யாசி !


கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும் மரியாதையும் அதிகம்!

இந்த உலகில் உன் வாழ்கை நிரந்தரம் இல்லாதது ஆனால் என் வாழ்க்கை இறப்பில்லா நிரந்தரமானது!


உன்னை விரும்பாதவர்கள் இந்த உலகில் இருக்கலாம்

 ஆனால் என்னை விரும்பாதவர்கள் யாரும் இந்த உலகில் கிடையாது!


எனக்கு இந்த உலகில் உள்ள பாதுகாப்பும் மரியாதையும்

 உனக்கு இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை!

நீதான் என்னை படைத்தாய் ஆனாலும் இந்த உலகில்

 நீ உயிர் வாழ முக்கிய தேவையாக நான் தான் இருக்கிறேன்!


இந்த உலகில் உன் உண்மை,நேர்மை,உழைப்பு ,

ஒழுக்கம்,நடத்தைகளைவிட எப்பொழுது 

நான் உன்னிடம் இருந்தால் தான் நீ நிம்மதியாக உயிர் வாழ முடியும்!.


இப்படிக்கு நான் தான் உங்கள் உயிர் நண்பன் பணம்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational