ஓட்டுக்குள் நத்தையாய்...!!
ஓட்டுக்குள் நத்தையாய்...!!
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை இருந்தும்
நினைக்காமல் இருக்க முடிவதில்லை...
சிறு சிறு ஆசைகள் தான் ஆனால்
நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்படுகிறது...
பல நேரத்தில் இது மன வலியை தந்தாலும்
சில நேரத்தில் மன வலிமையை தருகின்றது
இருந்தும் அது பயனற்று போகின்றது நிறைய இடங்களில்....
ஏன் பெண் என்பதாலா புரியவில்லை..
நினைத்த படிப்பை படிக்க தடை
விரும்பிய உடை அணிய தடை
பிடித்த வாழ்வை வாழத் தடை
வயிறு நிறைய சாப்பிட தடை
குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண் நண்பர்களுடன் பேச தடை
பிடிக்காத வாழ்வு என்றாலும் கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம்
தலையாட்டிக் கொண்டு வாழ வேண்டுமே தவிர&nbs
p;
தன்னை அடித்து துன்புறுத்தினாலும்
தேவையற்றதை பேசி மனதை வதைத்தாலும்
எத்தனை கொடுமைகள் செய்தாலும்
அடிமையாய் நடத்தி ஆட்டிப்படைத்தாலும் அதிலிருந்து
வெளியே வந்து சுதந்திரமாய் வாழ தடை
அப்படி சுதந்திரமாய் வாழலாம் என தன் வாழ்வை
வாழத் தொடங்கும் போதும் ஆயிரம் கட்டுக்கதைகள் கட்டி
மனதை வதைக்கும் கூட்டம் இருக்கும் வரை
மன வலிமை எவ்வளவு பெற்றும்
தன்னம்பிக்கை அற்று பயமும் கொண்டு
கூட்டுக்குள் நத்தையாய் தான் வாழ்கின்றனர் பலர்....
எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
மாறாத விஷயங்களில் ஒன்றாய்
கனவாய் இருக்கின்றது நான் நானாக இருக்க மாட்டேனா என
ஏக்கம் கொண்டு தன்னிலையற்று வாழ்பவர்களின் வாழ்வு...!!!